நம்பியூரில் புதிதாக ரூ.2 கோடி மதிப்பீல் கட்டப்பட்ட நம்பியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் செங்கோட்டையன் குத்து விளக்கேற்றி 102 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் தொலைக்காட்சியில் வகுப்பு வாரியாக பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மதுரை, சென்னை, கோவை ஆசிரியர்களை பணியில் அமர்த்தலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 52 லட்சம் மடிக்கணினிகளை வழங்கியது நமது தமிழ்நாடுதான். ஆறு ஆயிரம் பள்ளிகளில் வைஃபை வசதி செய்து கொடுப்பட்டுள்ளது.
12ஆம் வகுப்பு தேர்வு மறுக்கூட்டலுக்கு தனிமைப்டுத்தப்பட்ட மாணவர்களுக்கும் ஆன்லைனில் விண்ணப்பிப்பது பொருந்தும். பள்ளி திறப்பு, பாடங்கள் குறைப்பது குறித்து 18 பேர் கொண்ட குழுவின் அறிக்கை தயார்நிலையில் உள்ளது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க...'தற்காலிக உரிமம் பெற்ற 2 ஆயிரம் பள்ளிகள் கட்டணம் வசூலிக்க அனுமதியில்லை' - அமைச்சர் செங்கோட்டையன்