தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது சொந்த ஊரில் நடைபெறும் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு புனித நீர் எடுக்க ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் பவானி ஆறு, காவிரி ஆறு, அமுதநதி சங்கமிக்கும் இடத்திற்கு வந்தார்.
ஆற்றில் புனித நீராடிய அமைச்சர், புனித நீரை எடுத்துகொண்டு ஈரோடு காலிங்கராயன் விடுதிக்கு வந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டின் பிரச்னைக்குரிய விவகாரங்களில் முதலமைச்சரும், துணை முதலமைச்சருமே முடிவெடுப்பார்கள். தமிழ்நாட்டின் இரண்டாவது தலைநகரம் குறித்து அமைச்சர்கள் கருத்து தெரிவிப்பது அவர்களின் சொந்த கருத்து என முதலமைச்சர் முன்னதாகவே தெரிவித்துள்ளார்.
அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் குறித்து கட்சித் தலைமை எடுக்கும் முடிவை தாங்கள் ஏற்றுக்கொள்வோம்.
புதிய கல்வி கொள்கை குறித்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்தான் கருத்துகளைத் தெரிவிப்பார்” எனக் கூறினார்.