ETV Bharat / state

"எல்லோரும் காலையில் மது குடிக்கிறார்கள் என்று கூறவில்லை" - அமைச்சர் முத்துசாமி காட்டமாக பதில்! - வருவாயை அதிகரிப்பது நோக்கம் இல்லை

எல்லோரும் காலையில் மது குடிக்கிறார்கள் என்று தான் கூறவில்லை என்றும், டாஸ்மாக் விஷயங்களை திரும்ப திரும்ப பேசி பிரச்னையாக்க வேண்டாம் என்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

Minister
எல்லோரு
author img

By

Published : Jul 18, 2023, 5:18 PM IST

"எல்லோரும் காலையில் மது குடிக்கிறார்கள் என்று கூறவில்லை" - அமைச்சர் முத்துசாமி காட்டமாக பதில்!

ஈரோடு: 'தமிழ்நாடு தினம்' இன்று(ஜூலை 18) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பு புகைப்படக் கண்காட்சி நடத்தப்படுகிறது. தமிழ்நாடு தினத்தின் முக்கியத்துவத்தை இளைய தலைமுறையினரும் அறியும் வகையில், இன்று முதல் வரும் 23ஆம் தேதி வரை இந்த புகைப்படக் கண்காட்சி நடைபெறவுள்ளது.

அந்த வகையில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தமிழ்நாடு தின புகைப்படக் கண்காட்சியை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார். மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி தொகையையும் வழங்கினார்.

பின்னர் அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, தூய்மைப் பணியாளர்கள் காலையில் மது குடிப்பதாக அவர் கூறிய கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அமைச்சர், "தூய்மைப் பணிகளுக்கு இயந்திரங்களை கொடுத்தாலும், அந்த வேலையை நாம் செய்வோமா? - தூய்மைப் பணியாளர்களை மதியுங்கள் என்றுதான் கூறுகிறோம். ஏதாவது குறைபாடு இருந்தாலும், அதனை பெரிய பிரச்னையாக்காமல் தூய்மைப் பணியாளர்களை மனிதர்களாக மதியுங்கள். எல்லோரும் காலையில் மது குடிக்கிறார்கள் என்று கூறவில்லை. ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் பேசி வந்தால், அது பெரிய பிரச்னையாகிவிடும்.

எந்த தவறும் இல்லாமல் இந்த துறையை நடத்த வேண்டும் என்பதுதான் முதலமைச்சரின் விருப்பமாக உள்ளது. மதுக்கடைகளைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்ற ஆசை யாருக்கும் இல்லை. இப்போது 500 டாஸ்மாக் கடைகளை முடி இருக்கிறோம், கடைகளை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இப்போது கூட வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை கணக்கெடுத்து அதனை மூட வேண்டும் எனப் பேசி வருகிறோம். டாஸ்மாக் கடைகள் வருமானத்தை அதிகரிப்பது நோக்கமில்லை எனப் பல முறை சொல்லிவிட்டேன். ஆண்டு வருமானம் குறைந்தபட்சம் இவ்வளவு இருக்க வேண்டும் என்று நிர்ணயிப்பதற்கு காரணம், வருவாய் ஏன் குறைகிறது? என்று கேட்பதற்காக அல்ல. மக்கள் டாஸ்மாக் கடைகளுக்குப் பதிலாக ஏதேனும் தவறான இடத்திற்கு போய்விட்டார்களா? என்று கண்டறியத்தான், வேறு நோக்கம் இல்லை" என்றார்.

மேலும் பேசிய அவர், "டாஸ்மாக் கடையில் பணியாற்றுபவர்களின் நிலையை நேரில் பார்த்தால்தான் புரியும். உட்கார கூட இடம் இல்லாமல் வேலை செய்கிறார்கள். இவற்றையெல்லாம் சரிசெய்ய, டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகளை ஒருங்கிணைத்து, தொழிற்சங்கங்களுடன் ஆலோசித்து ஒரு வாரத்திற்குள் முடிவெடுக்க உள்ளோம்" என்று கூறினார்.

இதையும் படிங்க: டெட்ரா பாக்கெட்டில் மது, டாஸ்மாக் நேர மாற்றம்? - அமைச்சர் முத்துசாமி விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.