ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒன்பது இடங்களில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் தங்கும் நிழற்குடை, கவுந்தப்பாடி புதூரில் ரூ.8.70 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் ஆகியவற்றை தமிழ்நாடு சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் தொடங்கி வைத்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், தமிழ்நாட்டில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும், பவானி தொகுதியில் ரூ.1 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் 60 இடங்களில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்தார்.
நொய்யல் ஆற்றில் சாய ஆலைக் கழிவுகள் கலக்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டிற்கு பதில் அளித்த கருப்பணன், அது போல் நூறு சதவிகிதம் இல்லை எனவும், எந்த இடத்தில் என்று தெரிந்தால் அவர்களைப் பிடித்து மிசா சட்டத்தில் சிறையில் அடைக்கவும் தயாராக உள்ளோம், 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார்.