ETV Bharat / state

அதிமுக கிளை நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் கே.சி.கருப்பணன் - etv news

சத்தியமங்கலம்: ஏக்கா கடன் தள்ளுபடி ஆச்சா, அதிமுகதான் தள்ளுபடி செய்தது: பெண்களை பார்த்து கிராமப்புறப் பாணியில் அக்கா எனக்கூறிய அமைச்சர் கருப்பணன் பேங்க் அக்கவுண்ட்ல திமுக மாதம் ரூ.6 ஆயிரம் தருவதாக கூறினார்கள் 6 பைசாகூட தரவில்லை என்கிறார்.

அதிமுக கிளை நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் கே.சி.கருப்பணன்

author img

By

Published : Mar 22, 2021, 11:43 AM IST

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ.பண்ணாரியை ஆதரித்து கேர்மாளம், கடம்பூர் மலைப் பகுதியில் அமைச்சர் கருப்பணன் பரப்புரை செய்தார். பின்னர், ஆசனூரில் அதிமுக கிளை நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் கூறுகையில், ’’கடந்த மக்களவை தேர்தலில் திமுக பொய்யான வாக்குறுதியை தந்து தேர்தலில் வெற்றி பெற்றது. மேலும், வங்கி கணக்குகளில் மாதம் ரூ.6 ஆயிரம் தருவதாக வாக்குறுதி கொடுத்தார்கள் அதனை நம்பி நீங்களும் வாக்கு அளித்தீர்கள்.

இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நகைக்கடன் தள்ளுபடி என திமுக அறிவித்த காரணத்தால் அதை நம்பி உங்ளுடைய வங்கி கணக்குகளை கொடுத்தீர்கள். ஆனால், திமுக தள்ளுபடி செய்யவில்லை. அதிமுகதான் தள்ளுபடி செய்தது. தலமலை தாளவாடி பகுதியில் சுமார் ரூ.20 கோடி நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இதில், மகளிர் சுயஉதவிக்குழு கடன் ரூ.1 கோடி வரை தள்ளுபடியானது.

வரும் தேர்தலுக்கு பிறகு 100 நாள் வேலை திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும். அதிமுக தேர்தலில் அளித்த வாக்குறுதியான மிக்ஸி, கிரைன்டர், பேன்,100 யூனிட் கரண்ட் இலவசம் ஆகியவை அமல்படுத்தப்பட்டது. ஆனால் திமுக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. 37 எம்.பி.களை கொண்ட திமுக, பிரதமரை சந்தித்து கடன் தள்ளுபடி என்று கேட்டவில்லை” என்றார்.

இதையும் படிங்க: கோவை தெற்கு: நட்சத்திர வேட்பாளர் கமல் ஹாசன் வெல்வாரா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.