தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் அக்கட்சியின் 49ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றுவருகிறது.
ஈரோடு மாவட்டம் பவானி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வரதநல்லூர், சன்னியாசிபட்டி மூன்று ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் கொடிகளை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
பின்னர் கூலிக்காரன் பாளையம் பகுதியில் நடைபெற்ற திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளிலிருந்து 50 பெண்கள் உள்பட 200 பேர் அதிமுகவில் இணைந்தனர்.
இந்த விழாவில் பேசிய அமைச்சர் கருப்பண்ணன், "நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதாகச் சொல்வதெல்லாம் அவர் படம் ரிலீசாகி வெற்றிபெற வேண்டும் என்பதற்காகவே, 50 கோடி ரூபாய் சம்பாதித்துக் கொண்டு ஆஸ்திரேலியா சென்றுவிடுவார்.
எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்குப் பின்னர் நடிகர்கள் முதல்வராக முடியாது, அது ஒருபோதும் நடக்காது.
தற்பொழுது விவசாயி முதலமைச்சராகியுள்ளார், இனியும் விவசாயிகள் மட்டுமே முதலமைச்சர்களாக முடியும்" எனத் தெரிவித்தார்.