ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடியில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவில், சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் கலந்துகொண்டு 500 குடும்ப அட்டைதாரர்களுக்கு, தமிழ்நாடு அரசின் சிறப்புப் பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கினார்.
பின்னர் மக்களிடம் உரையாற்றிய அவர், 'தொலைக்காட்சிகளில் மோசமான நாடகங்கள் தான் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. நாடகங்களை தடை செய்தால் நன்றாக இருக்கும். சீரியல் பார்த்து மக்கள் மூளையை கெடுத்து கொள்கின்றனர். செய்தி சேனல்களை மக்கள் பார்த்து உலக நடப்புகளை அதிகளவு தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்தியாவில் முஸ்லீம்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு தான் குடியிருக்க அனுமதியில்லை. கன்னியாகுமரில் காவல் உதவி ஆய்வாளரை சுட்டுப் படுகொலை செய்துள்ளனர். அதுபோல் உள்ளவர்களுக்கு தமிழ்நாட்டில் இடம் இல்லை. தமிழ்நாட்டில் முஸ்லீம்களும், இந்துக்களும் தாய் பிள்ளையாக இருக்கிறோம். திமுக உள்ளிட்ட ஒரு சில கட்சிகள் தான் முஸ்லீம்களையும், இந்துக்களையும் பிரிக்க நினைகிறார்கள்' என்றார்.
இதையும் படிங்க: காதலுக்காக பேய் நாடகம் போட்ட இளம்பெண் - பிரம்பால் அடித்து எல்லைமீறிய திருநங்கை சாமியார்