தமிழ்நாட்டில் கரோனா வேகமாகப் பரவிவருகிறது. இதனைத் தடுப்பதற்கு அரசு கடந்த 15 நாள்களுக்கு முன்பு பொது ஊரடங்கு அறிவித்துள்ளது.
இதனால் காய்கறி மளிகைக் கடைகள் மூடப்பட்டு சாலைகள் வெறிச்சோடின. தற்போது தளங்களுடன்கூடிய பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் தனிக்கடைகள், காய்கறிகள், மளிகை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் சத்தியமங்கலத்தில் மினி காய்கறி மார்க்கெட் செயல்பட்டது. இதில் தகுந்த இடைவெளியின்றி, முகக்கவசமின்றி மக்கள் சந்தைக்கு வந்துசென்றனர்.
ஏற்கனவே சத்தியமாக நகராட்சி மூலம் காய்கறி வாகனங்கள் மூலம் விற்பனை செய்துவந்தது குறிப்பிடத்தக்கது.