ஈரோடு : மாவட்டம் நசியனூர் அடுத்த தயிர்பாளையத்தில் கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு கால்நடை மருத்துவ முகாமை துவக்கி வைத்தார்.
இதனையடுத்து நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேசுகையில்:ஆவின் நிர்வாகத்தை பொறுத்தவரையில் இரண்டு முக்கிமான நோக்கத்தை கொண்டு உள்ளது. அதில் முதலாவது ஆண்டு முழுவதும் விவசாய மக்களுக்கு சீரான முறையில் ,அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், இராண்டாவது தமிழகத்தில் உள்ள பொது மக்களுக்கு குறைவான விலையில் பால் கொடுப்பதாகும்.
தற்போது ஆவினில் நிர்வாக ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் விவசாயிகள் பால் வழங்கும் இடத்திலேயே தரத்தை பொறுத்து விலை நிர்ணயம் செய்து கொடுப்பதை உறுதி செய்து வருகிறோம்.தற்போது 40 சதவீதம் இடங்களில் இதற்கான பணிகள் நிறைவு பெற்று வருகிறது. மீதம் உள்ள இடங்களில் அதற்காக கருவிகள் வங்கப்பெற்று பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
இதனை தொடர்ந்து சித்தோடு ஆவின் நிறுவனத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற அமைச்சர் மனோ தங்கராஜ், தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் ஆவினில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் இது நல்ல பலனை தந்து இருக்கிறது.
கடந்த ஒரு மாதத்தில் 3,லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் பால் கூடுதலாக கொள்முதல் செய்து இருக்கிறோம்.இது கடந்த ஏப்ரல் மாதத்தை விட அதிகம் ஈரோடு மாவட்டத்தில் 27ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தி கூடியுள்ளது ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இலக்கு வைத்து கொள்முதல் செய்து வருகிறோம்.
”ஸ்பாட் டெக்னாலஜி” மூலமாக தற்போது பால் கொள்முதல் அதிகரித்து உள்ளதாகவும் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கும் நிலுவை தொகையை ஒரு வார காலத்திற்குள் கிடைக்குமாறு நடைமுறை படுத்தி உள்ளோம். கால்நடைகளுக்கு தரமான தீவனம் மற்றும் காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது .
பால் பொருட்களின் விற்பனை என்பது 10 சதவீதம் உயர்ந்து இருக்கிறது.ஆவின் பால் விற்பனையும் கணிசமாக அதிகரித்து உள்ளது மேலும் எத்தனை அமுல் நிறுவனம் வந்தாலும் ஆவினை ஒன்றும் செய்ய முடியாது சந்தையில் யார் வந்தாலும் அதனை எதிர்த்து நிற்கின்ற அளவிற்கு ஆவின் சக்தி கொண்டு இருக்கிறது என்று இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க :நெல்லை எம்.பி. ஞானதிரவியத்திற்கு திமுக தலைமை நோட்டீஸ்