ஈரோடு: சத்தியமங்கலம் பகுதியில் வசிக்கும் பெரும்பாலான பெண்கள் மகளிர் சுய உதவிக் குழுக்களை ஏற்படுத்தி பொதுத்துறை வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களிடமிருந்து குழுக் கடன் பெற்றுள்ளனர். இதையடுத்து, மகளிர் சுய உதவிக்குழு கடன் பெற்று, பல்வேறு சிறு தொழில்களை மேற்கொண்டு வரும் பெண்கள், தற்போது ஊரடங்கு காரணமாக வேலை இழந்து தவிப்பதாக வேதனைத் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், தனியார் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள், தற்போது மகளிர் சுய உதவிக்குழு கடன் பெற்றுள்ள பெண்களிடம் கடனைத் திருப்பிச் செலுத்துமாறு கட்டாயப்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளனர். தற்போது, முழு ஊரடங்கு காரணமாகப் பெண்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர்.
தனியார் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள், தொடர்ந்து மகளிர் சுய உதவிக்குழு கடன்களை திருப்பிச் செலுத்த கட்டாயப்படுத்தி வருகின்றனர். உடனடியாக இதில் மாநில, மத்திய அரசுகள் தலையிட்டு கடன் வசூலை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறும், அதுவரை கடனுக்கான வட்டியைத் தள்ளுபடி செய்யுமாறும், கால அவகாசம் அளிக்க தமிழ்நாடு அரசும் மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பெண்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: ஆட்சிக்கு வந்து என்ன செய்தோம் - முதலமைச்சர் ஸ்டாலின் உரை!