ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலை, கடத்தூர், கோபி, அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் போலி ஆவணங்கள் கொடுத்து சிம் கார்டுகளைப் பெற்று சிலர் முறைகேடு செய்தனர்.
இதுதொடர்பாக கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த ரூபேஷ் (45) என்பவர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையில், மாவோயிஸ்ட் இயக்கத்திற்கு ஆதரவு நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக ரூபேஷை கேரளா மாநில காவல் துறையினர் கைது செய்து, அம்மாநிலத்தில் உள்ள திருச்சூர் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், போலி ஆவணங்கள் கொடுத்து சிம் கார்டு பெற்ற வழக்கின் விசாரணைக்காக இன்று மாவோயிஸ்ட் ரூபேஷை கேரள மாநில காவல் துறையினர் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி உமா மகேஸ்வரி முன் ஆஜர்படுத்தினர்.
இதையும் படிங்க: அமைச்சர் தொடங்கிவைத்த திட்டம் குறித்து வாட்ஸ் அப்பில் அவதூறு பரப்பியவருக்குப் பிணை