ஈரோடு: கர்நாடக மாநிலத்தில் இருந்து ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வழியாக குட்கா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், சத்தியமங்கலம் காவலர்கள் பண்ணாரி சோதனைச் சாவடியில் வாகனத் தணிக்கை மேற்கொண்டனர்.
அப்போது, கர்நாடக மாநிலம், மைசூரில் இருந்து கோவை நோக்கி சென்ற கர்நாடக அரசுப் பேருந்தை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது, பேருந்தின் இருக்கைக்கு அடியில் இரண்டு சாக்கு மூட்டைகளில் 38 கிலோ எடையுள்ள தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்கள் இருந்தது தெரியவந்தது.
பேருந்துகளில் நடக்கும் கடத்தல்
அதனைக் கடத்தி வந்த திருப்பூர் மாவட்டம், பாப்பநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த பழனிவேல் (50) என்பவரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை, வாங்கி வந்து தமிழ்நாட்டில் கூடுதல் விலைக்கு விற்க முயற்சித்தது தெரியவந்தது.
இதையடுத்து, பழனிவேலை கைது செய்த காவலர்கள் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: விவசாயி வீட்டில் 15 சவரன் தங்க நகை, ரூ.1.50 லட்சம் திருட்டு!