ஈரோடு, அரச்சலூரை அடுத்த பழையபாளையத்தில் உள்ள வீடு ஒன்றில் சாராயம் காய்ச்சப்படுவதாக மதுவிலக்கு காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், அப்பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பழனிசாமி என்பவரது வீட்டில் சாராயம் காய்ச்சப்பட்டிருப்பது தெரியவந்தது.
பின்னர், பழனிசாமியை கைது செய்த காவல் துறையினர், அவரிடமிருந்த 20 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மதுவிலக்கு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: வெளிமாநில பாக்கெட் சாராயம் வைத்திருந்த இருவர் கைது!