கரோனா தொற்றின் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டு, உண்ண உணவின்றி மாற்றுத் திறனாளிகள் பலர் தவித்து வந்தனர். இதனைக் கருத்தில்கொண்டு மாற்றுத் திறனாளிகள் சிலர் காவல் ஆய்வாளர் ஜீவானந்திடம் உதவி செய்யக்கோரி கேட்டுள்ளனர்.
மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கையை ஏற்று மலையம்பாளையம் காவல் ஆய்வாளர் ஜீவானந்தம் 100க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பினை இன்று (ஜூன்.21) வழங்கினார்.
மாற்றுத் திறனாளிகள் பலர் கண்ணீர் மல்க மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பினை பெற்றுக்கொண்டு நன்றி தெரிவித்தனர்.