ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சியில் இணையும் விழா நேற்று (நவ. 31) நடைபெற்றது.
இவ்விழாவிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் திருமகன் ஈவெரா தலைமை வகித்தார்.
இதில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட இளைஞரணி செயலாளர் பரணி மற்றும் அல்டிமேட் தினேஷ் தலைமையில் அக்கட்சியிலிருந்து 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். மேலும் ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் இ பி ரவி முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் காங்கிரசில் இணைந்தனர்.
இவ்விழாவில் காங்கிரஸ் கட்சியின் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாற்றுக் கட்சியில் இருந்து புதிதாக இணைந்த பரணி, அல்டிமேட் தினேஷ், சபீக் அலி, சுதா, ஜுபைர் அகமது, முகமது இஸ்மாயில் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.