ETV Bharat / state

தக்காளி மினி லாரி மீது ஏறிநின்ற டிராவலர் வேன்; போலீஸ் விசாரணை - erode district news

ஈரோடு: திம்பம் மலைப்பாதையில் மினி லாரி மீது டிராவலர் வேன் மோதி விபத்திற்குள்ளானது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Breaking News
author img

By

Published : Feb 15, 2020, 11:32 PM IST

ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள திம்பம் மலைப்பாதையில் மைசூர் நோக்கி பயணிகளுடன் வந்த டெம்போ டிராவலர் வாகனம் ஒன்று, எதிர் திசையில் தக்காளி ஏற்றி வந்த மினி லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

நல்வாய்ப்பாக, இந்த விபத்தில் மினிலாரி டிரைவர் லேசானக் காயங்களுடன் உயிர் தப்பினார். லாரி கவிழ்ந்ததில் அதிலிருந்த தக்காளிகள் பெருமளவு சேதமாகின.

மினி லாரி மீது மோதி ட்ராவலர் ஏறி விபத்து

விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: மதுபோதையில் காரை தாறுமாறாக ஓட்டிய இளைஞர்கள் - மூன்று கார்கள் மீது மோதி விபத்து!

Intro:Body:tn_erd_04_sathy_timbam_van_abset_vis_tn10009

திம்பம் மலைப்பாதையில் தக்காளி பாரம் ஏற்றி வந்த மினி லாரி மீது மோதி ஏறி நின்ற டெம்போ ட்ராவலர்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள மலைப்பாதை வழியாக தமிழகம் கர்நாடக மாநிலங்களுக்கிடையே வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மாலை தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூர் நோக்கி பயணிகளை ஏற்றிய டெம்போ ட்ராவலர் வாகனமொன்று சென்றுகொண்டிருந்தது. இதேபோல் தாளவாடி மலைப்பகுதியில் இருந்து தக்காளி பாரம் ஏற்றிய மினி லாரி தமிழகம் நோக்கி வந்து கொண்டிருந்தது. 16 வது கொண்டை ஊசி வளைவில் தக்காளி பாரம் ஏற்றிய லாரி திரும்பியபோது எதிரே சென்ற டெம்போ டிராவலர் வாகனம் மினி லாரி மீது மோதியதில் லாரி கவிழ்ந்தது. அப்போது டெம்போ ட்ராவலர் இன் முன் சக்கரங்கள் மினி லாரி மீது ஏறி நின்றது. இந்த விபத்தில் மினிலாரி டிரைவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இது குறித்த தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மற்ற வாகனங்கள் செல்வதற்கு வழி உள்ளதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.