ETV Bharat / state

பாறையில் மோதிய கரும்பு லாரி: நல்வாய்ப்பாக உயிர்தப்பிய ஓட்டுநர்! - திம்பம் மலைப்பாதை

ஈரோடு: திம்பம் மலைப்பாதையில் வந்த கரும்பு லாரி பனிமூட்டம் காரணமாக பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் ஓட்டுநர் நல்வாய்ப்பாக உயிர்தப்பினார்.

விபத்துக்குள்ளான கரும்பு லாரி
விபத்துக்குள்ளான கரும்பு லாரி
author img

By

Published : Jan 2, 2020, 8:22 AM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த, தமிழ்நாட்டையும் கர்நாடகாவையும் இணைக்கும் முக்கிய வழித்தடமாக 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது.

கர்நாடகாவிலிருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான கரும்பு லாரிகள் திம்பம் மலைப்பாதையில் வந்துசெல்கிறது. இந்நிலையில், கர்நாடக ஹாசன் பகுதியிலிருந்து ஓட்டுநர் ராஜா ஓட்டிவந்த கரும்பு லாரி ஒன்று, திம்பம் 25ஆவது கொண்டை ஊசி வளைவில் திரும்பியுள்ளது.

விபத்துக்குள்ளான கரும்பு லாரி

அப்போது, பனிமூட்டத்தின் காரணமாக சாலையின் அருகே உள்ள பாறையின் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. லாரியிலிருந்த கரும்புகள் அனைத்தும் சாலையில் சரிந்தன. இந்த விபத்தில் லாரியின் முன்பகுதி மட்டும் சேதமடைந்துள்ள நிலையில் நல்வாய்ப்பாக லாரி ஓட்டுநர் காயமின்றி உயிர்தப்பினார்.

இதையும் படிங்க: குமரியில் தொடரும் அரசுப் பேருந்து விபத்துக்கள்: பயத்தில் பயணம் செய்யும் மக்கள்!

Intro:Body:tn_erd_04_sathy_timbam_accident_vis_tn10009

திம்பம் மலைப்பாதை பாறையில் கரும்புலாரி மோதி லாரி விபத்து

சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. தமிழகம் கர்நாடகத்தை இணைக்கும் முக்கிய வழித்தடமாக உள்ளது. கர்நாடகத்தில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான கரும்புலாரிகள் திம்பம் மலைப்பாதையில் பயணிக்கின்றன. இந்நிலையில கர்நாடகம் ஹாசன் பகுதியில் இருந்து வந்த கரும்பு லாரி, திம்பம் 25 வது வளைவில் லாரி திரும்பும்போது பனிமூட்டம் காரணமாக லாரி சாலையோர பாறை மீது மோதியது.இதில் லாரியின் முகப்பு பகுதி சேதமைடந்தது. இதனால் லாரியில் இருந்த கரும்புகள் ரோட்டில் சிதறின.ஆனால் லாரியில் இருந்த ஓட்டுநர் ராஜா காயமின்றி உயிர்தப்பினார. அதிகபாரம் காரணமாக லாரி விபத்துக்குளானதாக கூறப்படுகிறதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.