ETV Bharat / state

கான்கிரீட் கலவை இயந்திர லாரி கவிழ்ந்து விபத்து - மூவர் உயிரிப்பு! - erode district news

ஈரோடு சத்தியமங்கலம் அருகே கான்கிரீட் கலவை இயந்திரம் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

lorry-accident-in-erode-3-person-died
lorry-accident-in-erodlorry-accident-in-erode-3-person-diede-3-person-died
author img

By

Published : Jan 22, 2022, 6:22 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்துள்ள நஞ்சப்ப கவுண்டன் புதூரில் சாக்கடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக கான்கிரீட் கலவை கலக்கப்பட்டு அதனை ஏற்றி தேவைப்படும் பகுதியில் கொட்டி வந்தனர்.

இந்நிலையில் இன்று (ஜன.22) தயாரிக்கப்பட்ட கான்கிரீட் கலவையை ஏற்றிக்கொண்டு லாரி நெகமம் பிரிவு அருகே சாலையில் திரும்பும் போது அதிக பாரம் காரணமாக லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது.

இதில், லாரி ஓட்டுனரான தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பசாமி (23), சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த முத்தப்பன் (35) சரவணன் (30) ஆகிய 3 பேரும் லாரியின் அடியில் சிக்கிக் கொண்டனர். இதில் சந்தோஷ்குமார் என்பவர் விபத்தின்போது கீழே குதித்து உயிர்தப்பினார்.

தகவலறிந்து வந்த சத்தியமங்கலம் காவல்துறையினர் லாரிக்கு அடியில் சிக்கிய மூன்று பேரையும் ஜேசிபி இயந்திரம் மூலம் சடலமாக மீட்டனர். பின்னர், உடற்கூராய்வுக்காக மூன்று பேரின் உடல்களையும் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க : சிங்கார சென்னை 2.0 திட்டம் - நகரில் 23 புதிய பூங்காக்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.