சேலம் மாவட்டம் மல்லூரைச் சேர்ந்த ஜானகி என்பவர் தனது ஆயுர்வேத தயாரிப்புப் பொருட்களை விற்பனை செய்ய முகநூலில் கைபேசி எண்ணை பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த பாலசுப்பிரமணியன் என்பவர் தனது காதலி சுகன்யாவை அக்கா என்று அறிமுகப்படுத்தி ஜானகியுடன் பேசியுள்ளார்.
பின்னர் இவர்கள் இருவரும் ஆயுர்வேத பொருட்களை வாங்கிக் கொள்வதாக கூறி ஈரோடு மாவட்டம் பரிசல்துறை என்ற இடத்திற்கு ஜானகியை வரவழைத்துள்ளனர். இதை நம்பிச் சென்ற ஜானகியிடம் பொருட்கள் வாங்குவது போல் நடித்து, அவர் அணிந்திருந்த 6 அரை சவரன் தங்க நகையை இருவரும் சேர்ந்து மிரட்டி பிடுங்கிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து மொடக்குறிச்சி காவல் நிலையத்தில் ஜானகி அளித்த புகாரின் அடிப்படையில், குற்றவாளிகள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்க :
அரசு கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலனை செய்வது மகிழ்ச்சியளிக்கிறது - பழனிசாமி