ஈரோடு, சத்தியமங்கலம் அருகேயுள்ள புதுகுய்யனூர் கிராமத்தில் சிறுத்தை ஒன்று அங்குள்ள கால்நடைகளை வேட்டையாடி வந்தது.
இதனால், அச்சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து வேறு இடத்திற்கு கொண்டு சென்று விடுமாறு அப்பகுதி மக்கள் சத்தியமங்கலம் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து, சிறுத்தை நடமாடும் பகுதியில், அதைப் பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை அந்த கூண்டில் ஆறு வயதுள்ள ஆண் சிறுத்தை ஒன்று சிக்கிக்கொண்டது.
இதனைத்தொடர்ந்து, சிறுத்தை கூண்டு வைத்த வாகனம் மூலம் தெங்குமரஹாடா வனப்பகுதிக்கு கொண்டுச் செல்லப்பட்டு, அங்கு சிறுத்தை விடுவிக்கப்பட்டது.
இதையும் படிங்க:
குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது