ஈரோடு மாவட்ட சத்தியமங்கலம் அருகே உள்ள பெரியகுளம் மலையடிவாரத்தில் தினேஷ் என்பவருக்குச் சொந்தமான கரும்பு தோட்டம் உள்ளது. மலையடிவாரம் என்பதால் தோட்டத்திற்கு விலங்குகள் ஏதேனும் வாராமல் தடுக்க வேலி அமைத்து வைத்துள்ளார்.
இந்நிலையில், கரும்பு தோட்டத்திற்குள் சிறுத்தை குட்டி திரிவதைக் கண்ட விவசாயி ஒருவர், வனத்துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளார். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் நடத்திய சோதனையில் தோட்டத்திற்குள் சிறுத்தை குட்டி இருப்பதை உறுதி செய்தனர்.
அதனைத் தொடர்ந்து குட்டியைத் தேடி தாய் சிறுத்தை வரும் என வனத் துறையினர் எதிர்பார்த்து அதே இடத்தில் குட்டியை விட்டு காத்திருக்கின்றனர். இதனால், அதிகாலை நேரத்தில் மல்லிகைப்பூ பறிக்க தொழிலாளர்கள் வரவேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
மேலும் இரவு நேரத்தில் எவரும் உழவு பணி மேற்கொள்ள வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளனர். சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக சிறுத்தை நடைபாதையில் ஆங்காங்கே கண்காணிப்புக் கேமராக்களை வைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கூண்டில் சிக்கிய சிறுத்தை: பொதுமக்கள் நிம்மதி