ETV Bharat / state

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா மரணம்: கலங்கிய ஊர் மக்கள்

உயிரிழந்த சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேராவின் உடல் பொதுமக்களின் பார்வைக்காக ஈரோட்டில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவேரா மரணம்: தலைவர்கள் இரங்கல்

author img

By

Published : Jan 4, 2023, 10:45 PM IST

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா மரணம்: கலங்கிய ஊர் மக்கள்

ஈரோடு: பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பாரம்பரியத்தில், சொல்லின் செல்வர் ஈ.வெ.கி. சம்பத் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வழியில் பயணித்தவர், திருமகன் ஈவேரா. ஈவிகேஎஸ் இளங்கோவனின் மூத்தமகனான திருமகன் ஈவேரா, இன்று மாரடைப்பு காரணமாக, தனது 46 வயதில் உயிரிழந்தார்.

திருமகன் ஈவேராவுக்கு பூர்ணிமா என்ற மனைவியும் சமணா என்ற மகளும் உள்ளனர். தற்போது மனைவியை பிரிந்து விவாகரத்து பெற்று திருமகன் ஈவேரா வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. திருமகன் ஈவேராவுக்கு கடந்த 2021 சட்டமன்றத்தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற வேட்பாளராக திமுக கூட்டணியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.

தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரான யுவராஜை விட 8000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திருமகன் ஈவேரா, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் பல்வேறு திட்டப் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் சென்னையில் இருந்து இன்று அதிகாலை வீடு திரும்பிய திருமகன் ஈவேரா, ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள சொந்த வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். திடீரென அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அவசர ஊர்தி மூலம் கொண்டு சென்றனர்.

அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேராவின் உயிர் ஏற்கனவே பிரிந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவரது உடலானது கச்சேரி வீதியில் உள்ள அவரது வீட்டில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல் ஆனது உடனடியாக ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு தெரிவிக்கப்பட்டது. மேலும் உயிரிழந்த சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேராவின் உடல் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் திமுக, காங்கிரஸ் கட்சியினரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:சென்னை மெட்ரோ பணிகள்; புரதானச் சின்னங்கள் பாதிக்காது - தமிழக அரசு பதில்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.