ETV Bharat / state

பாக்யராஜ் மகனாக நடிக்க வைப்பதாக கூறி மோசடி - சினிமா விநியோகஸ்தரை கடத்திய கும்பல்! - tamilnadu police

சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி பணத்தை ஏமாற்றிய சினிமா விநியோகிஸ்தரை கடத்திய 3 பேரிடம் சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

krishna prasad kidnap
கிருஷ்ண பிரசாத் கடத்தல்
author img

By

Published : Jul 16, 2023, 11:11 AM IST

தயாரிப்பாளரை கடத்திய 3 பேர் கைது

ஈரோடு: கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர், கிருஷ்ண பிரசாத் (36). இவர் கன்னடம், தமிழ் மற்றும் மலையாள படங்களில் விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளராக இருந்து வருகிறார். இவருக்கு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த கரிகாலன் (45) மற்றும் கார்த்திகேயன் (23) ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஓராண்டுக்கு முன்பு கிருஷ்ண பிரசாந்த் கரிகாலன் மற்றும் கார்த்திகேயனிடம், இருவரையும் பாக்கியராஜ் மகனாக சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருகிறேன் என கூறியதாகத் தெரிகிறது. இதனையடுத்து கரிகாலன், கார்த்திகேயன் ஆகியோரிடம் கிருஷ்ணபிரசாத் ரூ 2.50 லட்சம் பணம் கொடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: தனியார் தங்கும் விடுதியில் ரகசிய கேமரா; மேலாளர் தலைமறைவு.. புதுச்சேரி போலீஸ் தீவிர விசாரணை!

பணத்தை வாங்கிய கிருஷ்ண பிரசாத், இவர்கள் இருவருக்கும் நடிக்க வாய்ப்பு கொடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். ஆனால், கிருஷ்ண பிரசாத் பணத்தை திருப்பிக் கொடுக்காததால் இருவரும் கிருஷ்ண பிரசாத்தை கடத்த முடிவு செய்துள்ளனர்.

இதன் அடிப்படையில், அருண் என்ற நபரை அனுப்பி வைத்து கிருஷ்ண பிரசாத்தை தொடர்பு கொண்டு என்னிடம் நல்ல கதை உள்ளது என கூறுமாறு சொல்லியதையடுத்து, கிருஷ்ண பிரசாத் கதை கேட்பதற்காக அருணை கிருஷ்ணகிரிக்கு வரச் சொல்லியுள்ளார். இதையடுத்து, நேற்று (ஜூலை 15) கிருஷ்ணகிரியில் தயாரிப்பாளர் கிருஷ்ண பிரசாத்தை சந்தித்த அருண், கிருஷ்ணகிரி நகர் பகுதியில் இருவரும் பேசிக்கொண்டே நடந்து சென்றுள்ளனர்.

அப்போது ஒரு ஆம்னி காரில் வந்த கரிகாலன், கார்த்திகேயன் மற்றும் சத்தியமங்கலம் அருகே உள்ள கொத்தமங்கலத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் சக்திவேல் (31) ஆகிய மூன்று பேரும் சேர்ந்து கிருஷ்ண பிரசாத்தை காரில் ஏற்றி கடத்திச் சென்றுள்ளனர். பின்னர், இது குறித்து தகவல் அறிந்த சத்தியமங்கலம் போலீசார் வடக்குப்பேட்டை வாரச்சந்தை பஸ் ஸ்டாப் அருகே சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டபோது, அவ்வழியே தயாரிப்பாளரை காரில் கடத்தி வந்த காரை மடக்கி பிடித்தனர். இதைத் தொடர்ந்து, சத்தியமங்கலம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பெண்களுக்கான மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம்’ : விண்ணப்ப பதிவு ஜூலை 24ஆம் தேதி தொடக்கம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.