ஈரோடு: கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம், தெப்பக்குளம் சரவணா தியேட்டர் சாலையில் 20க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
அதன்படி நரிக்குறவர் இன மூதாட்டி ஒருவர், தனது குடும்பத்தினருடன் நேற்று (ஆக. 23) பேருந்து நிலையத்தில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கரட்டடி பாளையத்தைச் சேர்ந்த ஓட்டுநர் செல்வன், மூதாட்டியின் அருகில் படுத்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
தர்ம அடி
இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி உதவி கேட்டு கூச்சலிட்டுள்ளார். உடனடியாக பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகள், பாலியல் தொந்தரவில் ஈடுபட்டவரை அடித்து உதைத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், பொதுமக்களிடம் இருந்து ஓட்டுநர் செல்வனை மீட்டனர். அப்போது செல்வன் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து ஓட்டுநர் செல்வனின் உறவினரை வரவழைத்த காவல்துறையினர், அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: மூதாட்டியிடம், ரூ.18 ஆயிரம் நிவாரண உதவி ஆசைக்காட்டி ரூ.2 லட்சம் நகைகள் அபேஸ்!