ஈரோடு: சத்தியமங்கலம் அருகேவுள்ள தொட்டம்பாளையம் பகுதியில் சௌடேஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் தைப்பொங்கல் பண்டிகையின்போது நடைபெறும் சக்தி அழைத்தல் நிகழ்வு பிரசித்தி பெற்றதாகும். இந்நிலையில் இன்று (ஜன.15) அப்பகுதியில் உள்ள பவானி ஆற்றில் இருந்து சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
மேளதாளம் முழங்க பவானி ஆற்றில் இருந்து கோயில் வரை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் என 200க்கும் மேற்பட்டோர் தங்கள் கைகளில் இரு கத்திகளை ஏந்தி தோளில் வெட்டியபடி மேளதாள இசைக்கேற்ப ஆட்டம் போட்டனர்.
இந்த நிகழ்ச்சியை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டு களித்தனர். முடிவில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் வயிற்றில் வாழைக்காயை வைத்து வாழைக்காயை கத்தியால் வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. மழை பொழியவும், விவசாயம் செழிக்கவும், கைத்தறி நெசவு தொழில் சிறக்க இந்த சௌடேஸ்வரி அம்மன் கோயில் பண்டிகை நடைபெறுவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: களைகட்டிய அவனியபுரம் ஜல்லிக்கட்டு - வீரர்கள் கொண்டாட்டம்