ETV Bharat / state

கர்நாடக எல்லையில் ரூ.2.8 கோடி மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல்! - கர்நாடக போலீசார் அதிரடி நடவடிக்கை

ஈரோடு: தமிழ்நாடு-கர்நாடகா எல்லை பகுதியில் கடத்தப்பட்ட ரூ.2.8 கோடி மதிப்புள்ள கள்ள நோட்டுகளை கர்நாடக காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் ரூ.2.8 கோடி மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல்!
author img

By

Published : Aug 17, 2019, 6:22 PM IST

தமிழ்நாடு - கர்நாடகா எல்லையான சாம்ராஜ்நகர் மாவட்டம், சொர்ணாவதி அணை அருகே சரக்குவாகனத்தில் கடத்தப்பட்ட ரூ.2.80 கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் கள்ளநோட்டுகளை கர்நாடக போலீசார் பறிமுதல் செய்தனர். தமிழகத்தையொட்டிய மாவட்டம் என்பதால் இரு மாநில போலீசாரும் உஷார் படுத்தப்பட்டனர்.

தமிழ்நாடு-கர்நாடகா எல்லையில் சொர்ணாவதி அணையையொட்டியுள்ள தேசிய நெடுஞ்சாலையில் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் கிழக்கு காவல் நிலைய காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது மாண்டியாவில் இருந்து வந்த சரக்கு ஆட்டோவை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது ஆட்டோவில் இருந்து நான்கு பேரில் மூன்று பேர் தப்பியோடினர். அதில் மாண்டியாவைச் சேர்ந்த கார்த்தி என்பவர் பிடிபட்டார். அதனைத் தொடர்ந்து கர்நாடக காவல் துறையினர் மேற்கொண்ட சோதனையில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள் பதுக்கி வைத்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதில் மொத்தம் 2.80 கோடி ரூபாய் கள்ளநோட்டுகள் இருப்பது தெரியவந்தது.

தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் ரூ.2.8 கோடி மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல்!

இது தொடர்பாக பிடிபட்ட கார்த்தியிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தின் எதிரொலியாக கர்நாடகாவிலிருந்து வரும் வாகனைங்களை தீவிரமாக தமிழ்நாடு காவல் துறை பரிசோதித்த பின்பு தான் தமிழ்நாட்டிற்குள் செல்ல அனுமதிக்கின்றனர்.

Intro:Body:tn_erd_02_2000_rupee_fake_note_vis_tn10009

தமிழக கர்நாடக எல்லையில் சரக்கு வாகனத்தில் கடத்திய ரூ.2.8 கோடி மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடக போலீசார் அதிரடி நடவடிக்கை

தமிழக கர்நாடக எல்லையான சாம்ராஜ்நகர் மாவட்டம், சொர்ணாவதி அணை அருகே சரக்குவாகனத்தில் கடத்தப்பட்ட ரூ.2.80 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் கள்ளநோட்டுகள் கர்நாடக போலீசார் பறிமுதல் செய்தனர். தமிழகத்தையொட்டி மாவட்டம் என்பதால் இரு மாநில போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.

தமிழகம் கர்நாடக எல்லையில் சொர்ணாவதி அணை உள்ளது. தமிழகத்தையொட்டியுள்ள கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டம், சொர்ணவதி அணை தேசிய நெடுஞ்சாலையில் சாம்ராஜ்நகர் கிழக்கு காவல்நிலையத்தைச் சேர்ந்த கர்நாடக போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சரக்கு வாகனத்தில் கள்ளநோட்டுகள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து மாண்டியாவில் இருந்து வந்த சரக்கு ஆட்டோவை கர்நாடக போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது ஆட்டோவில் இருந்து 4 பேரில் 3 பேர் தப்பியோடினர்.அதில் மாண்டியாவைச் சேர்ந்த மத்தூரைச் சேர்ந்த கார்த்தி என்பவர் பிடிபட்டார். அதனைத் தொடர்ந்து கர்நாடக போலீசார் மேற்கொண்ட சோதனையில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள் பதுக்கி வைத்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.அதில் மொத்தம் 2.80 கோடி ரூபாய் கள்ளநோட்டுகள் தெரியவந்தது. இது தொடர்பாக பிடிப்பட்ட கார்த்தியிடம் போலீசார் விசாரித்ததில் மாண்டியா அருகே மத்தூர் என்ற இடத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக சொர்ணாவதி அணைக்கு கொண்டுவரப்பட்டதால் தமிழகம் திம்பம் வழியாக கேரளாவுக்கு கள்ளநோட்டுகளை புழகத்தில் விட கடத்தப்பட்டதா, எங்கு அச்சடிக்கப்பட்டது இதில் தொடர்புடையை குற்றவாளிகள் குறித்து விசாரித்து வருகிறது. இது தொடர்பாக அவரை கைது செய்த போலீசார் தப்பியோடிய மூன்று பேரையும் தேடி வருகின்றனர். தமிழக எல்லையில் கள்ளநோட்டுகள் கடத்தல் தொடர்பாக தமிழக போலீசார் அதிர்ச்சை அடைந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து இரு மாநில எல்லையில் அமைந்துள்ள புளிஞ்சூர் சோதனைச்சாவடி, மற்றும் தமிழகத்தில் உள்ள ஆசனூர் மற்றும் பண்ணாரி சோதனையில் தமிழக போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்நாடகத்தில் இருந்து வரும் வாகனங்களை சோதனைக்கு பின்னரே போலீசார் அனுமதிக்கின்றனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.