கரோனா வைரஸ் பரவல் காரணமாக போக்குவரத்தானது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது ஒரு சில தளர்வுகளுடன் மற்ற வாகனங்களுக்கு போக்குவரத்து அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், கர்நாடக அரசு பேருந்தானது இரண்டு நாள்களாக தமிழ்நாட்டிற்குள் வந்து செல்வதாக புகார் எழுந்தது. இதனையடுத்து, ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியில் கர்நாடக அரசு பேருந்து ஒன்று நிற்பதை கண்ட பொதுமக்கள், பேருந்து சேவை தொடங்கிவிட்டதா என ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த தாளவாடி வட்டாட்சியர் ஜெகதீசன், சம்பவயிடத்திற்கு சென்று பேருந்தை ஓட்டிவந்த ஒட்டுநரிடம், தமிழ்நாட்டின் தாளவாடியில் போக்குவரத்து சேவைக்கு இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை. எனவே தாளவாடி பகுதியில் பேருந்தை இயக்கக் கூடாது என எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தார்.
இதையும் படிங்க: ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில் பொதுமக்கள் குளிக்க சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு
!