ETV Bharat / state

குழந்தைகளை ஊக்குவிக்க கல்விச்சீர்வரிசை வழங்கிய பொதுமக்கள் - anganwadi

ஈரோடு: போயகவுண்டனூர் அங்கன்வாடி மையத்தில் எல்கேஜி வகுப்புகள் தொடங்குவதற்கு ஆதரவு தெரிவித்து பெற்றோர்கள் அங்கன்வாடி மையத்துக்கு கல்விச்சீர் வழங்கி குழந்தைகளை பள்ளியில் சேர்த்தனர்.

கல்விச்சீர்வரிசை வழங்கிய பொதுமக்கள்
author img

By

Published : Jun 8, 2019, 10:20 PM IST

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ள போயகவுண்டனூர் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், இந்த குழந்தைகளை ஊக்குவிப்பதற்காக கிராம மக்கள், சுடர் தொண்டு நிறுவனம் சார்பில் குழந்தைகளுக்குத் தேவையான நாற்காலிகள், விளையாட்டு பொருட்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது.

குழந்தைகளை ஊக்குவிக்க கல்விச்சீர்வரிசை வழங்கிய பொதுமக்கள்

அதன்படி குழந்தைகளின் பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள் மங்கல வாத்தியம் முழங்க அங்கன்வாடி மையத்திற்குத் தேவையான பொருட்களை சீர்வரிசையாக கொண்டு சென்று ஒப்படைத்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளை ஊக்குவிப்பதற்காகவே கல்விச்சீர்வரிசை வழங்கும் விழாவை நடத்தியதாகத் தெரிவித்தனர்.

சத்தியமங்கலம் அருகே அங்கன்வாடி மையத்திற்கு கல்விச்சீர் வழங்கும் விழா  
--
;டி.சாம்ராஜ்,
செய்தியாளர்
சத்தியமங்கலம்
94438 96939, 88257 02216

 TN_ERD_04_08_SATHY_GOVT_ADMIS_VIS_TN10009

(Visual  FTP இல் உள்ளது)

சத்தியமங்கலம் அருகே அங்கன்வாடி மையத்திற்கு கல்விச்சீர் வழங்கும் விழா

மேள தாளம் முழங்க சீர்வரிசையுடன் சென்ற பெற்றோர்

சத்தியமங்கலம் அடுத்த போயகவுண்டனூர் அங்கன்வாடி மையத்தில் எல்கேஜி வகுப்புகள் துவங்கவதற்கு ஆதரவு தெரிவித்து பெற்றோர்கள் அங்கன்வாடி மையத்துக்கு  கல்விச்சீர் வழங்கி குழந்தைகளை பள்ளியில் சேர்த்தனர்.

தமிழகத்தில் அங்கன்வாடி மையத்தை பலப்படுத்துவதன் மூலம் அரசுப்பள்ளிகளை பாதுகாக்க முடியும் என்ற அரசின் திட்டத்திற்கு போயகவுண்டனூர் கிராமமக்கள் ஆதரவுதெரிவித்துள்ளனர்.சத்தியமங்கலம் அடுத்துள்ள போயகவுண்டனூர் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் 20 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். இந்த குழந்தைகளை ஊக்குவிப்பதற்காக கிராம மக்கள் மற்றும் சுடர் தொண்டு நிறுவனம் சார்பில் குழந்தைகளுக்கு தேவையான நாற்காலிகள், விளையாட்டு பொருள்கள்  வழங்கினர். இதன்படி, போயகவுண்டனூர் கிராமத்தில் இருந்து மங்கல வாத்தியம் முழங்க பள்ளி மாணவ மாணவியர் மற்றும் ஊர்ப்பபொதுமக்கள் அங்கன்வாடி மையத்திற்கு தேவையான பொருட்களை சுமந்தபடி ஊர்வலமாக சென்றனர். அங்கன்வாடி மையத்திற்கு சென்று பொருட்களை ஒப்படைத்தனர். அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளை ஊக்குவிப்பதற்கா கல்விச்சீர்வரிசை வழங்கும் விழாவை நடத்தியதாக கிராம மக்கள் தெரிவித்தனர். இவ்விழாவில் மைய பொறுப்பாளர்கள், பெற்றோர்கள், ஊர்ப்பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர். 
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.