ஈரோடு சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட கடம்பூர், அரிகியம் வனப்பகுதியில் கடம்பூர் வனச்சரகர் வெங்கடாசலம் தலைமையில், ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சர்க்கரைப்பள்ளம் என்ற பகுதியில் ரோந்து செல்லும் போது அங்கு ஆண்யானை ஓன்று இறந்த நிலையில் கிடந்துள்ளது. பின்பு இதுகுறித்து உடனடியாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து துணை இயக்குநர் உத்தரவின்பேரில் யானையின் உடலை வனத்துறை கால்நடை மருத்துவர் அசோகன் உடற்கூறாய்வு செய்தார்.
இதில் இறந்த யானை சுமார் 30 வயது மதிக்கத்தக்கது எனவும், வயிற்றுப்புண் நோய் தாக்கியதில் யானை உயிரிழந்ததாக தெரிவித்தார். ஆண்யானையின் உடலில் இருந்த 2 தந்தங்கள் அகற்றப்பட்டு, பின்னர் யானையின் உடல் பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு உணவாக அப்படியே விடப்பட்டது.