ETV Bharat / state

கோபி நீதிமன்றத்தில் நகைகள் திருட்டு: நீதிபதி அதிர்ச்சி!

கோபிசெட்டிபாளையம் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளில் ஒப்படைக்கப்பட்ட 6 சவரன் நகை மற்றும் 3 ஆயிரத்து 255 ரூபாய் ரொக்கம் அங்குள்ள நீதிமன்ற சார்நிலை கருவூலத்தில் வைக்கப்பட்ட நிலையில் திடீரென மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீதிமன்றத்தில் நகைகள் திருட்டு: நீதிபதி அதிர்ச்சி

author img

By

Published : Jun 8, 2023, 11:30 AM IST

கோபி நீதிமன்றத்தில் நகைகள் திருட்டு

கோபிசெட்டிபாளையம்: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1ல் கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற மோசடி வழக்கில் தொடர்புடைய 6 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. அதே போன்று சத்தியமங்கலம் வனத்துறை தொடரப்பட்ட வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 1,445 ரூபாய், கோபி காவல் நிலைய வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 1,450 ரூபாய் மற்றும் பங்களாபுதூர் காவல் நிலைய வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 360 ரூபாய் என மொத்தம் 3,255 ரூபாய் தொகையாக ஒப்படைக்கப்பட்டது.

மேலும், பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகை மற்றும் பணம் இரும்பு பெட்டியில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டு லாக்கரில் வைக்கப்பட்டு இருந்தது. இந்த சீல் வைக்கப்பட்ட இரும்பு பெட்டி ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்திற்கு எடுத்து வரப்பட்டு, மாஜிஸ்திரேட் முன்னிலையில் சீல் உடைக்கப்பட்டு வழக்கு தொடர்பான நகை மற்றும் பணம் எடுக்கப்பட்டு மீண்டும் பூட்டி சீல் வைக்கப்பட்டு சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்படும்.

இந்நிலையில் கடந்த 25-ஆம் தேதி சீல் வைக்கப்பட்ட இரும்பு பெட்டி நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டு மீண்டும் சார் நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்று(ஜூன் 7) இரும்பு பெட்டி சார்நிலை கருவூலத்தில் இருந்து நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது இரும்பு பெட்டியை திறந்து நகையை எடுக்க மாஜிஸ்திரேட் முயன்ற போது, இரும்பு பெட்டியின் பூட்டிற்கு போடப்பட்ட சீல் உடைக்கப்பட்டாமல் இருந்தது. ஆனால் பூட்டப்படும் இரும்பு கொக்கி உடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதையும் படிங்க:தென்காசியில் தீ விபத்தால் 100 டன் தென்னை நார் நாசம்

பின்னர், பெட்டியில் இருந்த நகை மற்றும் பணத்தை கோப்புகள் சரி பார்த்த போது, கடம்பூர் காவல் நிலைய வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 6 சவரன் நகை மற்றும் வெவ்வேறு மூன்று காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 3 ஆயிரத்து 255 ரூபாய் மாயமாகி இருப்பது தெரியவந்தது.

இச்சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த மாஜிஸ்திரேட் விஜய் அழகிரி இதுகுறித்து கோபி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மாயமானது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். சார்நிலை கருவூலத்தில் லாக்கரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்த நகை மற்றும் பணம் மாயாமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க:ஆவினில் குழந்தை தொழிலாளர்கள்.. பால் திருட்டு முயற்சியா? - அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.