ETV Bharat / state

மல்லிகைப் பூவின் விலை கடும் சரிவு - மல்லிகைப் பூவின் விலை வீழ்ச்சி

ஈரோடு: சத்தியமங்கலத்தில் மல்லிகைப் பூவின் விலை கடுமையாக சரிந்துள்ளது.

மல்லிகை பூ
மல்லிகை பூ
author img

By

Published : Sep 24, 2020, 8:04 AM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டத்தில் 50 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் மல்லி, முல்லை, சம்பங்கி பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

இந்த பூக்கள் சத்தியமங்கலம் பூ மார்க்கெட் கொண்டுவரப்பட்டு ஏல முறையில் விற்கப்படுகிறது. சீசன் சமயத்தில் மல்லிகை கிலோ 2 ஆயிரம்வரை விற்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாள்களுக்கு முன்பு கிலோ ரூ. 450 மல்லிகை தற்போது கிலோ 120க்கு விற்கப்பட்டது. மல்லிகை நடவு மருந்து தெளித்தல், பூப்பறித்தல் கூலி என கிலோ 120 வரை செலவாகிறது.

தற்போது புரட்டாசி மாசம், வெப்ப சலனம் போன்ற காரணங்களால் மல்லிகை உற்பத்தி 6 டன்னிலிருந்து 10 டன்னாக உயர்ந்தது. சத்தியமங்கலம், நிலக்கோட்டை, மதுரை போன்ற இடங்களில் மக்களிடத்தில் போதிய வரவேற்பு இல்லாததால் பூக்களை கொள்முதல் செய்ய வியாபாரிகள் முன்வரவில்லை.

இதனால் பூக்களின் விலை கடுமையாக சரிந்துள்ளது. விவசாயிகளுக்கு கட்டுப்படியாகாத விலை என விவசாயிகள் புகார் தெரிவித்த நிலையில், கோயம்புத்தூரில் செயல்படும் வாசனை திரவிய ஆலைகளும் செயல்படாததால் பூ விலை சரியத் தொடங்கியுள்ளது. இம்மாத இறுதிவரை இதே நிலை நீடிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.