ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள விவசாயிகளால் நடத்தப்படும் பூச்சந்தைக்கு, சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து மல்லிகைப்பூ விற்பனைக்கு கொண்டுவரப்படும். பின்னர், ஏல முறையில் விலை நிர்ணயம்செய்யப்பட்டு கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும், கொச்சின், எர்ணாகுளம், பெங்களூரு, மைசூரு, ஹைதராபாத் உள்ளிட்ட வெளிமாநில நகரங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.
இந்நிலையில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக, மல்லிகைப்பூவின் விலை வெகுவாகக் குறைந்துள்ளது. கடந்த வாரம் கிலோ 500 ரூபாய் வரை விற்பனையான நிலையில், படிப்படியாகக் குறைந்து இன்று 140 ரூபாய்க்கு விற்பனையானது.
இதனால், மல்லி பயிரிட்ட விவசாயிகள் மிகுந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வேதனைத் தெரிவிக்கின்றனர். இதேபோல் சம்பங்கி பூவும் விலை குறைந்து, கிலோ 20 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இதையும் படிங்க: கரோனா அச்சுறுத்தல்: தமிழ்நாடு-கர்நாடக எல்லை மூடல்