ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் மலர் சாகுபடி முக்கிய தொழிலாக உள்ளதால், சுமார் 2000 பேர் நேரடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இப்பகுதியில், 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மல்லிகை பூ சாகுபடி செய்து வருகின்றனர்.
இங்கு பறிக்கப்படும் பூக்கள் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் ஏலம் முறையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களுக்கும், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன.
இந்நிலையில் பனிப்பொழிவு காரணமாக, மல்லிகைப் பூக்களின் வரத்து குறைந்ததன் காரணமாக பூக்கள் மொட்டு வளராமலும், சிறுத்து பச்சைப் பூச்சி தாக்கியுள்ளது.
சாதாரண நாள்களில் ஏக்கர் ஒன்றுக்கு 25 கிலோ வந்த நிலையில், தற்போது அரை கிலோ மட்டுமே மகசூல் கிடைத்துள்ளது.
எனவே, பூக்களின் வரத்து குறைந்ததன் காரணமாக, சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு மல்லிகை கிலோ ரூ. 1200 வரை விற்பனையான நிலையில், இன்று (டிச.23) கிலோ 3,100 ரூபாயை எட்டியதால் மல்லிகைப்பூ சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: கிராம சபைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசியல் கட்சிகள்!