ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்த மலைப்பகுதியில் காய்கறி, பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுவது வழக்கம்.
இந்நிலையில் தாளவாடி மலைப்பகுதியில் தற்போது மூன்று மாத காலப்பயிரான சின்ன வெங்காயம் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது.
கடந்த 10 நாள்களுக்கு முன்பு சின்ன வெங்காயம் கிலோ 50 ரூபாய் வரை விற்ற நிலையில் தற்போது மீண்டும் விலை அதிகரித்து கிலோ ரூ.170-க்கு விற்பனையாகிறது.
சின்ன வெங்காயத்திற்கு நல்ல விலை கிடைப்பதால் தாளவாடி மலைப்பகுதியில் வெங்காயம் பயிரிட்ட விவசாயிகள் தற்போது விவசாய தோட்டங்களில் பயிரிட்ட சின்ன வெங்காயத்தை அறுவடைசெய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அறுவடை செய்யப்பட்ட சின்ன வெங்காய விற்பனை விலை உயர்ந்துள்ளதால் தாளவாடி மலைப்பகுதியில் சின்ன வெங்காயம் பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.