ETV Bharat / state

ஆடு திருடிய நபரை காலால் உதைத்த காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்

சத்தியமங்கலம் அருகே ஆடு திருட முயன்ற நபரை பொதுமக்கள் முன்னிலையில் தாக்கிய சிறப்பு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஆடு திருடிய நபரை காலால் உதைத்த காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்
ஆடு திருடிய நபரை காலால் உதைத்த காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்
author img

By

Published : Jun 14, 2022, 7:02 PM IST

ஈரோடு : சத்தியமங்கலம் அருகே காவிலிபாளையம் பகுதியைச்சேர்ந்த விவசாயி நாகராஜ் என்பவரது தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த வெள்ளாடுகளை கடந்த ஜூன் 2அன்று, திருப்பூர் மாவட்டம், கொட்டகாட்டுபாளையம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் வந்து திருட முயன்றனர்.

அங்கிருந்த மக்கள் அந்த கும்பலைச் சேர்ந்த குமார் என்பவரை பொதுமக்கள் பிடித்து புஞ்சைபுளியம்பட்டி காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். அப்போது அங்கு வந்த காவல் துறையினர் குமாரைப் பிடித்துச் செல்லும்போது புஞ்சைபுளியம்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளர் முருகேசன் ஆத்திரத்தில் ஆடு திருட முயன்ற குமாரை காலால் தாக்கியுள்ளார்.

இதை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் வீடியோ எடுத்து வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். தற்போது இந்த வீடியோ வைரலானதால் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் புஞ்சைபுளியம்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளர் முருகேசனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

ஆடு திருட முயன்ற நபரைக் காலால் எட்டி உதைத்த சிறப்பு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது காவல் துறையினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: வெளிநாட்டில் உள்ளவர் பெயரில் ரூ.2.8 லட்சம் பயிர்கடன்; மோசடியில் ஈடுபட்ட கூட்டுறவு சங்க தலைவர் தற்காலிக பதவி நீக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.