பள்ளி கோடை விடுமுறை முடிந்து பள்ளிகளை திறக்கும் முன்பு பள்ளி வாகனங்களை வருவாய் துறை, வட்டார போக்குவரத்துத் துறை, போலீஸ் துறை ஆகிய துறைகள் கூட்டாக ஆய்வு செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் செயல்படும் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மற்றும் பவானி தாலுகாக்களில் செயல்பட்டுவரும் தனியார் பள்ளிகளின் 250க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்களை கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பொறியியல் கல்லூரி வாளாகத்தில் வட்டாரப்போக்குவரத்து அலுவலர் பழனிவேலு தலைமையில் அதிகரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
பள்ளி வாகனங்களில் அவசர காலவழி உள்ளதா , தீயணைப்பு கருவி மற்றும் மருத்துவ முதலுதவி பெட்டி வைக்கப்பட்டுள்ளதா , பிரேக், முகப்பு விளக்கு, இருக்கை , மேற்கூரை என ஒவ்வொரு பகுதியையும் அங்குலம் அங்குலமாக ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கினர். அரசு அறிவித்துள்ள 18 விதிமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதா என்றும் ஆய்வு மேற்கொண்டனர்.