ETV Bharat / state

உலக நாடுகளுக்கு தலைமை தாங்கும் நாடாக இந்தியா மாறும் - ஆளுநர் ஆர்.என்.ரவி - Governor

2047-ல், உலக நாடுகளுக்கு தலைமை தாங்கும் நாடாக இந்தியா மாறும் என ச தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளுக்கு தலைமை தாங்கும் நாடாக இந்தியா மாறும் - ஆளுநர் ஆர்.என்.ரவி

author img

By

Published : Aug 4, 2022, 10:35 AM IST

ஈரோடு: சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 217 வது நினைவு நாள் விழாவை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே ஓடாநிலையிலுள்ள மணிமண்டபத்தில் அமைக்கப்பட்ட அவரது திருவுருவ சிலைக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் கோவைச் சேர்ந்த கொங்கு சமூக ஆன்மிக கல்வி மற்றும் கலாச்சாரம் அறக்கட்டளை மற்றும் தீரன் சின்னமலை கூட்டமைப்பு சார்பில் ஜெயராமபுரத்தில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மற்றும் தீரன் சின்னமலை வாரிசுதார்கள் கலந்து கொண்டனர்.

மேலும் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் இராமனந்தா குமரகுருபர சுவாமிகள், பழனி ஆதீனம் சாது சண்முக அடிகளார் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் தீரன் சின்னமலை வாரிசுதார்ர்களுக்கு ஆளுநர் ஆர்.என.ரவி கேடயம் வழங்கி கெளரவுப்படுத்தினர்.

விழாவில் பேசிய பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, கொங்கு கலாச்சாரம் இந்தியளவில் தனி கலாச்சாரமாக விளங்கி வருவதாகவும் இந்தியா பல கலாச்சாரா அடிப்படையிலான நாடாக விளங்குறது என்றார். தீரன்சின்னமலை தமிழகத்தை தாண்டி போற்றப்பட வேண்டிய நபர் என்றும் தற்போது சென்னிமலை - சிவன்மலை இடையே சுருக்கப்பட்டுள்ளதாக வேதனையுடன் தெரிவித்தார். கலாச்சாரத்தை அழியாமல் பாதுகாக்க வேண்டும். தலைவர்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

பின்னர் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தீரன் சின்னமலை சிறந்த சுதந்திர போராட்ட வீரர், சுதந்திரத்திற்காக தீரன் சின்னமலை தனது உயிரை தியாகம் செய்தார். நமது நாட்டின் விடுதலைக்காக உயிரை சிந்தியவர்களை மறக்கக்கூடாது. தீரன் சின்னமலைக்கு நன்றியாக சிறந்த பாரதத்தை உருவாக்க வேண்டும். தமிழ் பழமையான மொழி, அழகான மொழி. தமிழ் மக்கள் போல் தமிழ் பேச வேண்டும் என்று எனது விரும்பம். ஒருநாள் தமிழில் பேசுவேன் என தமிழில் உரையாற்றினார்.

சிறந்த கலாச்சாரத்தைக் கொண்ட இந்த கொங்கு மண், சிறந்த மனிதர்களையும், மாபெரும் வீரர்களையும் உருவாக்கிய வரலாற்றைக் கொண்டுள்ளது. ரோமானிய அரசுகளுடன் வர்த்தகம் புரிந்த வரலாறு கொண்டது. கொங்கு மண் மிகவும் செழிப்பான, வளமான நிலமாகும். சேர, சோழ, பாண்டிய மன்னர்களையும், வீரர்களையும் உருவாக்கியுள்ளது. இந்த மண்ணில் இன்று இருப்பது எனக்கு பெருமையான விஷயமாகும்.

இந்தியாவின் தலைசிறந்த மகனான, சிறந்த சுதந்திரப் போராட்ட வீரராக விளங்கிய தீரன் சின்னமலைக்கு அஞ்சலி செலுத்த இங்கு வந்துள்ளது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மாபெரும் மனிதரையும், அவரது மகத்தான தியாகத்தையும் வணங்குகிறேன். இத்தகைய தலைசிறந்த தலைவர்களை உருவாக்கக்கூடிய இந்த மண்ணின் பெருமையை உணர்கிறேன். ‘கொங்கு செழித்தால், எங்கும் செழிக்கும்’ என்ற பழமொழியைப்போல், கொங்கு செழிப்பாக இருந்தால், அனைவரும் செழிப்பாக இருப்பார்கள்.

உலக நாடுகளுக்கு தலைமை தாங்கும் நாடாக இந்தியா மாறும் - ஆளுநர் ஆர்.என்.ரவி

தீரன் சின்னமலையின் வரலாற்றை அழிக்க ஆங்கிலேயர்கள் முயற்சி செய்தனர். ஆனால் தீரன் சின்னமலையின் வரலாறும், தியாகமும் இங்குள்ள மக்களின் இதயங்களில் எழுதப்பட்டுள்ளது. தலைமுறை, தலைமுறையாக அவரின் சிறப்பான வரலாறு நாட்டுப்புற பாடல்கள் மூலம் பரப்பப்பட்டு வருகிறது. இந்த மாபெரும் வீரரின் சிறப்பை நாடு முழுமையாக அங்கீகரிக்கும் வகையில் 2015-ம் ஆண்டு சிறப்பு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது.

மக்களில் ஒருவராக இருந்த தீரன் சின்னமலை, ஆங்கிலேயர்கள் இந்த நிலத்தை ஆக்கிரமிக்க முயன்ற போது எதிர்த்து போரிட்டார். ஆங்கிலேயருடனான போரில் ஹைதர் அலி தோற்கடிக்கப்பட்டபோது, ஆங்கிலேயரிடம் இருந்து நமது மண்ணையும், மக்களையும் போர் நடத்தி வெற்றி கண்டு காப்பாற்றினார். நன்கு கட்டமைக்கப்பட்ட, ஆயுதங்களைக் கொண்ட ஆங்கில ராணுவத்தை எதிர்த்து, இளைஞர்களை ஒருங்கிணைத்து, உள்ளூர் ஆயுதங்களைக் கொண்டு, தனது போர் தந்திரத்தால், ஆங்கிலப்படைகளை தீரன் சின்னமலை தோற்கடித்தார்.

தீரன் சின்னமலையின் கரிஷ்மாவைக் கண்டு, வியூகத்தைக் கண்டு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்கள் உயிரையே தியாகம் செய்ய முன்வந்தார்கள். அவரது தலைமை பண்பு குறித்து பாடப்புத்தகங்களில் இடம்பெற வேண்டும். பெரிய மரபு, பின்னணி இல்லாமல், தனது தைரியம், நம்பிக்கை, உறுதியின் காரணமாக உயர்ந்த இடத்தை அடைந்து, இளைஞர்களைத் திரட்டி மிகப்பெரிய ஆங்கிலேயப் படையை வெற்றி கொண்டிருக்கிறார். அவர் தான் போர் வியூகத்தாலும், கொரில்லா முறை போர்க்கலையாலும் இந்த வெற்றியைப் பெற்றார்.

இந்த மாபெரும் தலைவரின் பன்முகத்தன்மையை இன்னும் நாம் முழுமையாகப் பாராட்டவில்லை என நினைக்கிறேன். ஆனால், தூரோகத்தின் மூலம் ஆங்கிலேயர் இந்த நிலத்தை வெற்றி பெற முடியாது என்பது தெரியவந்துள்ளது. தீரன் சின்னமலை சிறந்த தலைவர், போர் வீரர் மட்டுமல்லாது, தொலைநோக்கு பார்வையாளராகவும் இருந்தார். ராணுவ பலமும், பொருளாதார வளம் மட்டும் நமக்கு போதும் என்று நினைக்காமல், அறிவுசார் வளர்ச்சியும் தேவை என தீரன் சின்னமலை நினைத்தார்.

அதனால், இந்த மண்ணின் அறிஞர்களை, கவிஞர்களையும் அவர் ஊக்குவித்தார். தர்மத்தின் பாதுகாவலராகவும் புரவலராகவும் விளங்கினார். சேர, சோழ பண்டியர்களால் நாட்டின் பெருமைக்குரிய பாரம்பரியக் கோயில்கள் கட்டப்பட்டன. பிரமாண்டம், அழகு, சிறந்த கட்டிடக் கலை கொண்ட இந்த கோயில்களுக்கு இணையாக, கிரேக்கம் உள்ளிட்ட உலகின் எந்த கட்டகலையையும் ஒப்பிட முடியாது. அப்போது இங்கு தோன்றிய தர்மம், நாடு முழுவதும் வெளிச்சமாய் பரவியது. தீரன் சின்னமலையும் இந்த தர்மத்தை பின்பற்றினார். குலதெய்வ குல வழிப்பாட்டைத் தொடர்ந்தார்.

இந்த நாட்டின் ஆன்மா, இந்த தர்மத்தில் தான் வாழ்கிறது. உலகின் பழமையான மொழி தமிழ் மொழி. உலகின் பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம். துரதிஷ்டவசமாக வரலாற்றில் திரிபுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இறுதியில் உண்மை வெல்லும். சிலப்பதிகாரத்தில் பாரதம் குறித்தும், இந்து தர்மம் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. கங்கையில் இருந்து மதுரை வரை அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சனாதான தர்மத்தைப் போலவே, இத்தகைய விலைமதிப்பற்ற நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ள கருத்துக்களை அழிக்க முடியாது.

நாம் யார், எப்படி வளர்ந்தோம் என்பதை சத்தமாகவும், தெளிவாகவும் இந்த நூல்கள் வெளிப்படுத்தியுள்ளன. தீரன் சின்னமலை குலதெய்வ வழிபாட்டின் மூலம், பாரதத்தின் ஆன்மாவை பாதுகாத்தார். உலகளாவிய சகோதரத்துவத்தைத்தான், சனாதனம், கலாச்சாரம், தர்மம் என்று சொல்கிறோம். உலகின் உயர்ந்த கடவுள் நம் அனைவரிடத்திலும் வாழ்கிறார் என்றுதான் வேதம் சொல்கிறது. ஒரே கடவுள் தன்னை வெவ்வேறு வழிகளில் வெளிப்படுத்திக் கொள்கிறார்.

எனவே, நாம் அனைவரும் சகோதர, சகோதரிகள். இதுதான் இந்த தர்மத்தின் சாராம்சம். இந்தியா உலகின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் போது, உலகமே நமது குடும்பமாக மாறும். 75 ஆண்டு சுதந்திர தினவிழாவில், நமது சுதந்திரப்போராட்ட வீரர்களையும், சிறந்த தலைவர்களையும் போற்ற வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளில் 2047-ல், இந்தியா உலகின் தலைவராக மாறி இருக்கும்.

உலகில் தீவிரவாதம், போர், பொருளாதார ஏற்றத்தாழ்வு போன்றவை அதிகரித்து, மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நேரத்தில், போரை ஆதரிக்காத, போரினை நடத்தாத இந்தியாவை உலகம் தலைமை தாங்க எதிர்பார்க்கிறது. உலகில் உதவி தேவைப்படும் நாடுகளுக்கெல்லாம் உதவும் நாடாக இந்தியா மட்டுமே உள்ளது. கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டபோது, உலகமே பாதிக்கப்பட்டது. அனைத்து தரப்பு மனிதர்களும் பாதிக்கப்பட்டனர். பலரை நாம் இழந்தோம். அந்த நேரத்தில் லாப நோக்கமில்லாமல், தடுப்பூசியை நாம் கண்டுபிடித்து, தயாரித்து, அனைத்து நாடுகளுக்கும் வழங்கினோம்.

இதற்காக, நமது விஞ்ஞானிகளுக்கும், தொழில்நுட்பவியலாளர்களுக்கும் நாம் நன்றி சொல்லுவோம். 150 நாடுகளுக்கு மேல் கரோனா தடுப்பூசியை இலவசமாக நாம் வழங்கினோம். உங்களைப்போலவே பிறரையும் நினைக்கும் இந்த தர்மம் இந்தியாவிடம் மட்டுமே உள்ளது. 75 வது சுதந்திரதினத்தைக் கொண்டாடும் நாம், தீரன் சின்னமலையின் கனவுப்படி, பொருளாதார வளம், ராணுவ பலம், அறிவுசார் வளர்ச்சி பெற்ற, தர்மத்தை காக்கும் நாடாக இந்தியாவை உருவாக்க வேண்டும்.

இந்த நாடு மக்களால், இளைஞர்களால் உருவாக்கப்பட்டது. 2014-ம் ஆண்டுக்கு முன் பல்வேறு கட்டுப்பாடுகளால், 400 ஸ்டார்ட் அப் (புதிய தொழில் தொடங்குவோர்) இருந்த நிலையில், தற்போது கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, 8ஆயிரம் கோடிக்கு மேல் மதிப்புடைய, 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய தொழில்களை தொடங்க இளைஞர்கள் முன்வந்துள்ளனர். நமது நாட்டின் இளைஞர்கள் தங்கள் திறமையினால், பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகின்றனர். விண்வெளி, கடல் சார் தொழில்நுட்பம் என பலவற்றில் சாதனை படைத்து வருகிறோம். இந்தியா மிக வேகமாக வளர்ந்து வருகிறது.

ரஷ்யா - உக்ரைன் போர் நடக்கும்போது, அதனை நிறுத்த வேண்டும் என இந்தியாவிடம் உலக நாடுகள் கோரிக்கை வைக்கின்றன. அங்கு போரை நிறுத்தி நமது மாணவர்கள் மீட்கப்பட்டனர். சீனா, அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் உலகின் மிக வேகமான பொருளாதார வளர்ச்சிச் கொண்ட மூன்று நாடுகளாக உள்ளன. ஜப்பான் போன்ற நாடுகள் கூட பின்தங்கி விட்டன. நமது இளைஞர்களின் உழைப்பால், இந்த மூன்றில் முதல் நாடாக இந்தியா வரும்.

இந்திய மக்கள் ஒரு குடும்பமாக இருப்பதால் அனைவருக்குமான வளர்ச்சி கிடைக்கிறது. நாட்டின் அனைத்து பகுதிகளில் வாழும் மக்களுக்கும், எவ்வித வேறுபாடும் காட்டாமல், மின்சாரம், சுகாதாரம், இருப்பிடம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது "என தெரிவித்தார்.

இதையும் படிங்க: சென்னையில் காவலர்கள் இடமாறுதல்களுக்காக பணியிட மாறுதல் குழு அமைக்க உத்தரவு

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.