ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டி.எம்.சி நீர் கொள்ளளவு கொண்டதாகும். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்நிலையில் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி, வடகேரளாவின் ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு நீர் வரத்து நேற்று 409 கனஅடியாக இருந்த நிலையில், இன்று காலை நீர் வரத்து 1872 கன அடியாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் தற்போது அணையின் நீர் மட்டம் 56.75 அடியாகவும், நீர் இருப்பு 6.2 டி.எம்.சியாகவும் உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்கு 205 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.