ETV Bharat / state

அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - erode district news in tamil

பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்ததால், அணையின் நீர்வரத்து 6,327 கன அடியாக அதிகரித்துள்ளது.

Increase in water level to Bhavani Sagar Dam
அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை:பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
author img

By

Published : May 16, 2021, 11:04 PM IST

ஈரோடு: மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் கரூர் மாவட்டங்களில் உள்ள இரண்டு லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 105 அடி உயரமும் 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்ட பவானிசாகர் அணை, தமிழ்நாட்டில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்குகிறது.

கடந்த சில மாதங்களாக பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி, வடகேரளா பகுதிகளில் மழை பெய்யாததால் அணைக்கு நீர்வரத்து சரிந்தது. இந்நிலையில், டாக்டே புயல் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான வடகேரளா, நீலகிரி மலைப்பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை:பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

இதன் காரணமாக நேற்று (மே.15) அணையின் நீர்வரத்து 286 கன அடியாக இருந்த நிலையில், இன்று (மே.16) காலை அணையின் நீர்வரத்து 6,327 கனஅடியாக அதிகரித்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 88.42 அடியாகவும், நீர் இருப்பு 20.5 டிஎம்சி ஆகவும் உள்ளது. அணையிலிருந்து பாசனம், குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 1,050 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் உயரும் என பாசனப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ஆக்ஸிஜன் உற்பத்தியை பெருக்க வேண்டும்: எம்.எல்.ஏ. ஈவேரா வேண்டுகோள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.