தமிழ்நாட்டிலேயே ஈரோடு மாவட்டம் புஞ்சைப் புளியம்பட்டி வாரச்சந்தை இரண்டாவது பெரிய சந்தையாகும். வாரந்தோறும் வியாழனன்று இங்கு நடைபெறும் கால்நடைச் சந்தைக்கு ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து கால்நடைகளை வாங்கிச் செல்வது வழக்கம்.
புரட்டாசி மாதம் முடிவடைந்த நிலையில், கடந்த மாதம் முழுவதும் விரதமிருந்த பொதுமக்கள் இந்த மாதத்தில் அசைவ உணவை விரும்புவர் என்பதால் ஆடுகளை வாங்க வியாபாரிகள் ஆர்வம் காட்டினர். சத்தியமங்கலம், புஞ்சைப் புளியம்பட்டி, அவினாசி, அன்னூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் 200க்கும் மேற்பட்ட வௌ்ளாடுகள், செம்மறியாடுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
மேலும் 10 கிலோ எடை கொண்ட வௌ்ளாடு ரூ.4 ஆயிரம் முதல் ரூ. 5 ஆயிரம் வரையும் விலை போனது. நேற்று நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் ரூ.15 இலட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல் நாட்டுக்கோழி விற்பனையும் பரபரப்பாக நடைபெற்றது. இன்று முதல் மீன் விற்பனையும் அதிகரிக்கும் என்பதால் மீன்கடைகள் அதிகளவில் திறக்கப்படும் என அசைவ பிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதையும் படியுங்க: