ஈரோடு அசோகபுரத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது சகோதரர் சண்முகம் என்பவரும் இவரும் சேர்ந்து ஈரோடு மூலப்பட்டறை, சோலாரில் ஆண்டவர் லேத் ஒர்க்ஸ் என்ற பெயரில் சமையல் எண்ணெய் அரவை இயந்திரங்கள் தயாரித்துவருகின்றனர்.
இந்தநிலையில் ஆண்டவர் லேத் ஒர்க்ஸ் நிறுவன உரிமையாளர்களின் வீடுகள் உள்ளிட்ட ஐந்து இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
ஈரோடு மற்றும் கோவையிலிருந்து வந்த 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இச்சோதனையில் ஈடுபட்டனர். இதில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் சார்பில் முறையான கணக்கு தாக்கல் செய்யாததால் இச்சோதனை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பொய்க் குற்றச்சாட்டைச் சுமத்துவதாக ஐபிஎஸ் மனைவி மீது புகார்