ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர் வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் வாழ்ந்துவருகின்றன. இந்த யானைகள், உணவு, தண்ணீர் தேடி மற்றொரு இடத்திற்கு சாலையைக் கடந்து செல்லும். இந்நிலையில், அரேப்பாளையம் தொட்டி என்ற இடத்தில் மலையிலிருந்து கீழே இறங்கிய யானைகள் அடுத்த பகுதிக்கு செல்ல முயன்றன. ஆனால் அங்கு தடுப்புக் கம்பிச் சுவர் அமைக்கப்பட்டிருந்ததால் யானைகளால் கடக்கமுடியவில்லை.
இதற்கிடையே வாகனங்கள் சாலையில் நின்றதால் அதன் இரைச்சல் காரணமாக மீண்டும் காட்டுக்குள் யானைகள் குட்டிகளுடன் திரும்பிச் சென்றன. யானைகள் உணவு தேடி சாலையைக் கடப்பதால் வாகன ஓட்டிகள் மெதுவாக செல்லுமாறு வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க...கரோனா சிகிச்சை: கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை!