திருப்பூர் நாடாளுமன்றத்தொகுதிக்குட்பட்ட ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பெரியார் திடலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமலஹாசன், அத்தொகுதி நாடாளுமன்ற வேட்பாளர் சந்திரகுமாருக்கு வாக்கு சேகரித்து பரப்புரையில் மேற்கொண்டார்.
அப்போது கமல் பேசுகையில், மனம் மாற்றம் மக்களிடம் வந்துவிட்டது. அதற்கு முன்னோடியாக தமிழகம் இருக்கப்போகிறது. ஓட்டுப்போட பணம் கொடுக்க மாட்டோம். இது பணக்கார கட்சி கிடையாது, இதுவே எங்களது நேர்மையின் அடையாளம். தற்போது தமிழகம் புரட்சியின் விளம்பில் நிற்கிறது. தமிழ்நாடு மக்களாகிய நீங்கள் நல்ல முடிவை எடுத்து விட்டால், தமிழகத்திற்கு ஒளி விளக்காக இந்த கட்சி திகழும் என்று தெரிவித்தார்
தமிழகத்தை புற வாசலாக நடத்துகிறார்கள், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் தலைவாசலாக மாற்ற முடியும் என அவர் தெரிவித்தார்