ஈரோடு மாவட்டத்திற்கு வருகைபுரிந்த அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் பாலசந்திரன், ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் தேர்வாணையத் தேர்வுக்கான உபகரண பாதுகாப்பை ஆய்வுசெய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தமிழ்நாட்டில் 36 மாவட்டங்களில் 152 வகையான துறைசார்ந்த தேர்வுகள் பிப்ரவரி 14 முதல் 22ஆம் தேதிவரை நடத்த முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி தற்போதைய தேர்வில் 54 ஆயிரத்து 161 பேர் எழுதிவருகின்றனர். 152 துறைகளில் பணிசெய்யும் வல்லுநர்கள், ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 721 பேர் தேர்வு எழுதவுள்ளனர்.
ஈரோட்டில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, வள்ளலார் மெட்ரிக் பள்ளி ஆகியவை தேர்வு மையங்களாகத் தேர்வுசெய்யப்பட்டு நேற்று காலை 92 பேரும், மாலை 49 நபர்களும் பல்வேறு துறை தேர்வுகள் எழுதினர்.
துறைசார்ந்த தேர்வு எழுதி முடித்தவர்களுக்குப் பதவி உயர்வு, அவர்களது பணி வரன்செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. கரோனா பரவல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் நடத்த வேண்டிய தேர்வு தற்போது நடக்கிறது" என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நீலகிரியிலிருந்து கோபிக்கு காய்கறிகள் கொண்டுவர நடவடிக்கை!