ETV Bharat / state

மனைவியக் கட்டையால் அடித்துக் கொலை செய்த கணவன் கைது - மனைவி கட்டையால் அடித்து கொலை

ஈரோடு: மனைவியைக் கட்டையால் அடித்துக் கொலைசெய்த கணவரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

sundram
sundram
author img

By

Published : Jan 11, 2020, 10:56 PM IST

ஈரோடு மாவட்டம் பழையபாளையம் பகுதியில் உள்ள அன்னை நகர் குடியிருப்புப் பகுதியில் வசித்துவருபவர் சுந்தரம் - ஜமுனாராணி தம்பதியினர். இவர்களுக்கு கார்த்திகேயன் என்ற மகனும், சந்தியா என்ற மகளும் உள்ளனர்.

தம்பதியினரிடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த சுந்தரம் அருகில் கிடந்த விசைத்தறி இயந்திரத்துக்கு பயன்படுத்தும் கட்டையால் ஜமுனாராணியை சரமாரியாகத் தாக்கி கொலை செய்துள்ளார்.

பின்னர் மதுரையில் உள்ள தனது மகன் கார்த்திகேயனுக்கு போன் செய்து நடந்தவற்றை கூறியுள்ளார். கார்த்திகேயன் அளித்த தகவலின் பேரில், சுந்தரத்தின் வீட்டிற்குச் சென்ற சூரம்பட்டி காவல் துறையினர் வீட்டின் கதவை திறந்துபார்த்தபோது, ரத்தக் காயங்களுடன் சுந்தரம் வெளியே வந்து மனைவியை கொலைசெய்துவிட்டதாக காவல் துறையினரிடம் கூறியுள்ளார்.

மனைவி கட்டையால் அடித்து கொலை செய்த கணவன் கைது

இதையடுத்து ரத்தக் காயங்களுடன் இருந்த சுந்தரத்தை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த காவல் துறையினர், ஜமுனாராணியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தக் கொலை தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: காவல் துறையினரை தாக்கிய நபர்கள் - சிசிடிவி காட்சி!

Intro:ஈரோடு ஆனந்த்
ஜன11

மனைவி கட்டையால் அடித்து கொலை - கணவன் கைது

ஈரோட்டில் மனைவியை கட்டையால் அடித்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு அடுத்துள்ள பழையபாளையம் பகுதியில் உள்ள அன்னை நகர் குடியிறுப்பு பகுதியில் வசித்து வருபவர் சுந்தரம் ஜமுனாராணி தம்பதியினர்.

சுந்தரம் வெள்ளோடு பகுதியில் உள்ள கவுண்டச்சிபாளையம் பகுதியில் சொந்தமாக விசைத்தறி தொழில் செய்து வருகின்றார். இவர்களுக்கு திருமணம் ஆகிய கார்த்திகேயன் என்ற மகனும், சந்தியா என்ற மகளும் உள்ளனர்.

ஈரோட்டில் தனியாக வசித்துவரும் சுந்தரத்திற்கும் ஜமுனாராணிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் தினமும் சண்டை நடந்துவந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது தகாத வார்த்தையில் மனைவி ஜமுனாராணி சுந்தரத்தை திட்டியதால் ஆத்திரமடைந்த சுந்தரம் விசைத்தறி இயந்திரத்துக்கு பயன்படுத்தும் கட்டையால் ஜமுனாராணியின் தலையில் அடித்து கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார்.

மனைவியை கொலை செய்த ஆத்திரம் தீர்ந்தவுடன் தான் என்ன செய்வது என்று தெரியமால் இருந்த சுந்தரம் தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து கத்தியால் கழுத்து மற்றும் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால் அதிலும் தான் சாகவில்லை என்று மீண்டும் மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து முயன்றுள்ளார்.

பின்னர் என்ன செய்வது என்று தெரியாமல் மதுரையில் உள்ள தனது மகன் கார்த்திகேயனுக்கு போன் செய்து நடந்தவற்றை கூறியுள்ளார். கார்த்திகேயன் அளித்த தகவலின் பேரில் சுந்தரத்தின் வீட்டிற்கு சென்ற சூரம்பட்டி காவல்துறையினர் வீட்டின் கதவை திறந்து பார்த்த போது உடலில் கழுத்து மற்றும் கையில் ரத்த காயத்துடன் சுந்தரம் வெளியே வந்து தனது மனைவியை கொலை செய்து விட்டதாக காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.

காவல்துறையினர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது சுந்தரத்தின் மனைவி ஜமுனாராணி தலையில் பலத்த காயங்களுடன் கொடூரமாக அடித்து கொலை செய்து வீடுமுழுவதும் சிந்திய ரத்த வெள்ளத்தின் நடுவே பிணமாக கிடந்தார்.

Body:இதனையடுத்து உடலில் காயங்களுடன் இருந்த சுந்தரத்தை மீட்டு சிகிச்சைகாக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்ததுடன் மனைவி ஜமுனாராணியின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

Conclusion:இந்த கொலை சம்பவம் தொடர்பாக சூரம்பட்டி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பேட்டி : மணிகண்டன். பக்கத்து வீட்டுக்காரர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.