ETV Bharat / state

Corona Virus: கரோனா பாதிக்கப்பட்டவருக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது எப்படி?

கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது எப்படி என்பது குறித்து புஞ்சைபுளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார பணியாளர்கள் ஒத்திகையில் ஈடுபட்டனர்.

COVID-19
கரோனா
author img

By

Published : Apr 12, 2023, 1:32 PM IST

COVID-19: கரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது எப்படி?

ஈரோடு: தமிழ்நாட்டில் தற்போது கரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் மொத்தம் 5 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. அதிலும், தமிழ்நாட்டில் மட்டும் 440-ஐ கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 20 நபர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு எந்த மாதிரியான பரிசோதனைகளை மேற்கொள்வது மற்றும் சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்து அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்பச் சுகாதார நிலையம், தனியார் மருத்துவமனைகளில் ஒத்திகை பணிகளை மேற்கொள்ள சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புஞ்சைபுளியம்பட்டி அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் கரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை ஒத்திகை பணி மேற்கொள்ளப்பட்டது. அதில் ஆம்புலன்சில் வரும் நோயாளியைக் கவச உடை அணிந்த செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் ஸ்ட்ரெச்சரில் அழைத்து சென்று பரிசோதனை மற்றும் சிகிச்சை முறைகளை மேற்கொண்டனர்.

மேலும் சுவாச பிரச்னை உள்ள நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கும் முறைகள் குறித்தும் ஒத்திகையில் ஈடுபட்டனர். அரசு உத்தரவின் படி கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குப் பரிசோதனை மற்றும் சிகிச்சை முறைகளை மேற்கொள்ள சுகாதாரத்துறை பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளதாகச் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது அதிகரித்து வரும் கரோனாவைத் தடுக்க வேண்டும் என்றால், பொது இடங்களில் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். பொது மக்கள் அனைவரும் முடிந்த அளவு கூட்டமான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் கரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சுவாமிமலையில் வள்ளி திருமணத்தை முன்னிட்டு குறவர் இன மக்கள் 30 வகையான சீர் வரிசையுடன் சிறப்பு அர்ச்சனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.