ஈரோடு: கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, மேட்டூர் அணைக்கு வரும் உபரி நீரானது ஒரு லட்சம் கன அடியைத் தாண்டி உள்ளது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி ஒரு லட்சத்து 25 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரியாற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, ஈரோடு மாவட்டம், பவானி நகராட்சிக்கு உட்பட்ட காவிரி கரையோரப் பகுதியான கந்தன் பட்டறை, கீரைக்காரர் தெரு, பாலக்கரை உள்ளிட்டப்பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக, அப்பகுதியில் வசித்த பொதுமக்களை அரசுப்பள்ளிகளில் ஏற்படுத்தபட்டுள்ள முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைத்துள்ளனர்.
முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு பவானி நகராட்சி மற்றும் வருவாய்த்துறை சார்பில் தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து தண்ணீர் அதிகரிக்கும் பட்சத்தில் பவானி நகரில் உள்ள செம்படவர் வீதி, மார்க்கெட் பகுதி உள்ளிட்ட பகுதிகளிலும் தண்ணீர் வர வாய்ப்புள்ளதால் அப்பகுதி உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகாம்களுக்கு செல்லுமாறு வருவாய்த்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: ஜெயலலிதாவின் வந்தியத்தேவன் நான் தான்.. ரஜினிகாந்த் கலகலப்பான பேச்சு...