ஈரோடு: திமுக இளைஞரணிச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் ஈரோடு மாவட்டம் பவானியில் நேற்று (நவம்பர் 28) திமுக சார்பில் குதிரை ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. விழாவிற்கு பவானி நகர திமுக செயலாளர் ப.சீ. நாகராஜன் தலைமை வகித்தார். இளைஞரணி அமைப்பாளர் இந்திரஜித் வரவேற்றுப் பேசினார்.
ஈரோடு, நாமக்கல், கோவை, கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த குதிரைகள், வீரர்கள் பந்தயத்தில் பங்கேற்றனர். பெரிய குதிரைகளுக்கான பந்தயப் பிரிவில் ஈரோடு சரவணன் குழுவினர் முதலிடம் பிடித்து இருபதாயிரம் ரூபாய் பரிசு பெற்றனர்.
உள்ளூர் குதிரை பந்தயப் பிரிவில் ஈரோடு சரவணன் குழுவினர் முதல் பரிசையும், பவானி சிங்காரவேல் இரண்டாம் பரிசையும், குமாரபாளையம் வெங்கிடு மூன்றாம் பரிசையும் வென்றனர்.
வெற்றிபெற்ற வீரர்கள், குதிரை உரிமையாளர்களுக்கு திமுக மாநில சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனர் குறிஞ்சி சிவகுமார், அந்தியூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஏஜி வெங்கடாசலம் ஆகியோர் நினைவுப்பரிசு, சான்றிதழ், ரொக்கப் பணம் வழங்கினர். பந்தயத்தில் சீறிப் பாய்ந்த குதிரைகளை பொதுமக்கள் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.
இதையும் படிங்க: சிறார்கள் குற்றவாளியாக மாற யார் காரணம்? - குழந்தைகள் நல ஆர்வலர்கள் விளக்கம்