ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் எஸ்ஆர்டி கார்னர் பகுதியில் விஜயகுமார் என்பவர் லாரி , உதிரிபாகங்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார். இவர், வழக்கம் போல நேற்று (பிப். 17) கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
அதன்பின், திடீரென தீப்பிடித்து எரிவதை கண்ட அப்பகுதி பொதுமக்கள், உடனடியாக சத்தியமங்கலம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடம் சென்ற தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அரைமணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், கொட்டகை முழுவதும் எரிந்ததோடு லாரி உதிரிபாகங்களும் எரிந்து நாசமாயின.
தீ விபத்தில் சேதமடைந்த பொருட்களின் மதிப்பு சுமார் ரு.5 லட்சம் என தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், தீ விபத்தின்போது அருகே உள்ள வீடுகளில் இருந்தவர்கள் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததால் குடியிருப்பு பகுதியில் தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
இதையும் படிங்க:சேலம் நாம மலையில் திடீர் தீ - பல்வேறு மரங்கள் சேதம்