ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டுவருகிறது. இப்பள்ளியின் தலைமையாசிரியர் சந்திரன் ஆசிரியர்கள் வருகைப்பதிவேடு, பராமரிப்புகுழு நிதி கணக்கு புத்தகம் உள்ளிட்ட பல்வேறு பள்ளி ஆணவங்களை பள்ளியில் ஒப்படைக்காமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் கல்வித்துறை அலுவலர் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பள்ளியில் ஆவணங்கள் ஏதும் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைத்துள்ளார். இது குறித்து தலைமையாசிரியரிடம் விசாரித்தபோது ஆவணங்களைத் தனது வீட்டில் வைத்துள்ளதாக கூறியுள்ளார். இதையடுத்து கல்வி அலுவலர்கள் ஆவணங்களை வாங்க தலைமையாசிரியரை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றனர். அப்போது ஆவணங்கள் வீட்டில் இல்லை பேக்கரி ஒன்றில் உள்ளதாக கூறியுள்ளார்.
இதையடுத்து கல்வி அலுவலர்கள் பேக்கிரிக்கு செல்லும்போது, வழியில் தலைமையாசிரியர் தப்பியோட முயற்சித்துள்ளார். சுதாரித்து கொண்ட கல்வி அலுவலர், ஆசிரியர்கள் அவரை மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து தலைமையாசிரியரிடம் ஆவணங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரயில் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வெளிவந்ததும், அப்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டு வழக்கு முடிந்து தற்போது கடந்த ஜுன் மாதம் மீண்டும் பணியில் சேர்ந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: மத்திய அரசு சார்பில் நெசவாளர்களுக்கு சிறப்புப் பயிற்சி